அவசியமற்ற மேடையில் அரசியல் தொடர்பான கருத்துகளை முன்வைத்ததன் காரணமாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க விமர்சனங்களில் சிக்கியுள்ளார்.
நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியில் இடம்பெற்ற பழைய மாணவர்கள் ஒருங்கிணைத்த நிகழ்வு ஒன்று நேற்று நடத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்விற்கு விஷேட அதிதியாக ரஞ்சன் ராமநாயக்க அழைக்கப்பட்டுள்ளார். நிகழ்வுக்கு வந்த பின்னர் பாடல் ஒன்றினைப் பாடுமாறு ரஞ்சனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பாடல்பாடி பாராட்டுகளைப் பெற்ற ரஞ்சன் அதனைத் தொடர்ந்து அரசியல் விவகாரம் குறித்து உரையாற்ற ஆரம்பித்துள்ளார்.
எனினும் கல்லூரி அரசியலுக்கு அப்பாற்பட்டது எனவும் பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்த நிகழ்வில் அரசியல் பேச வேண்டாம் என சக மாணவர்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பினை வெளிப்படுத்தி ரஞ்சனை பேச விடாது தடுத்துள்ளனர்.
இதன்பொது ரஞ்சன் ராமநாயக்கவின் பாதுகாப்பு அதிகாரிகள் எதிர்ப்புகளைக் கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டதன் காரணமாக நிகழ்வில் குழப்பங்கள் ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விடயமானது தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதன் காரணமாக பிரதியமைச்சர் பல்வேறு விமர்சனங்களில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.