இந்திய செய்திகள்:இந்தியாவில் நகைகள் திருடிவிட்டதாக கூறி, பெண் ஒருவரை தாக்கி அவரை நிர்வாணப்படுத்திய உறவினர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தின் Jaunpur மாவட்டத்தில் உள்ள Tahipur Baki கிராமத்தில் நடந்த உறவினரின் திருமணத்திற்காக கடந்த 30-ஆம் திகதி 45 வயது மதிக்கத்தக்க தலித் பெண், தன் கணவருடன் சென்றுள்ளார்.
திருமணம் முடிந்த அடுத்த நாள், அவர் இருக்கும் அறைக்கு வந்த உறவினர்கள் அவரிடம் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல், அவருடைய லக்கேஜ் போன்றவைகளில் ஏதோ தேடியுள்ளனர்.
அதன் பின் திடீரென்று அந்த பெண்ணை அடித்து நகைகள் எங்கே என்று கேட்டுள்ளனர். அந்த பெண் நகைகள் எல்லாம நான் எடுக்கவில்லை, அதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று கூற, உடனே அவர்கள் உன் மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது என்று கூறி அவர் அணிந்திருந்த உடையை அகற்றி நிர்வாணப்படுத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இரும்பு கம்பியை சுட வைத்து உடலிம் பல பாகங்களில் சூடு வைத்துள்ளனர். இதனால் அந்த பெண் வலியால் துடுத்துள்ளார்.
இருப்பினும் அந்த பெண் எந்த ஒரு பதிலும் கூறாமல், சுயநினைவை இழந்துள்ளார். இறந்துவிடுவாள் என்ற பயத்தில் அவர்கள் உடனடியாக கணவருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதும், அவரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும், உயிர் பிழைப்பது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார்.
ஆத்திரமடைந்த அப்பெண்ணின் கணவர் உறவினர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் புகாரை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து தெரிவித்த பின்னரே அவர்கள் புகாரை ஏற்றுக் கொண்டதாகவும், இது தொடர்பான உறவினர்கள் இரண்டு பேரை பொலிசார் விசாரித்து வருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.